Tuesday, November 29, 2011

வண்ணம் பலவிதம் - சிறுகதை

கர்ம யோகி கண்ணன் வீடு கட்டி முடித்தான். புதிய வீட்டில் எந்த அறைக்கு எந்த வண்ணம் பூசலாம் என்று தன் குடும்பத்தில் இருப்பவர்களிடம்  கேட்டான். "சமையல் அறைக்கு பிஸ்தா பச்சை வண்ணம் பூசலாம்," என்றாள் மனைவி மங்களம்.  "படுக்கை அறைக்கு பன்னீர் ரோஜா வண்ணம் பூசலாம்," என்றான் மகன் மாரி.  "பூஜை அறைக்கு சாமந்தி  பூ மஞ்சள் வண்ணம் பூச வேண்டும்," என்றாள் மகள் மஞ்சுளா.

"ஆனால் வரவேற்ப்பு அறையில் எல்லா வண்ணமும்  பூச  போகிறோம்," என்றான் கர்ம யோகி கண்ணன். அப்பா நகைச்சுவையாக பேசுகிறார் என்று எல்லோரும் சிரித்தார்கள். " சிரிக்காதீர்கள். எல்லா வண்ணமும் சேர்த்தால் வெள்ளை நிறம் கிடைக்கும்வரவேற்ப்பு அறையில் பனி வெள்ளை நிறம் அடிக்க போகிறோம்புரிந்ததா?" என்றான் கண்ணன்.


No comments:

Post a Comment